சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மாரனேரி உள்ள பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தி நேற்று நடைபெற்றபோது, ஒரு அறையில் வெடியில் மருந்து செலுத்தும் போது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு, அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மாதாங்கோவில்பட்டியை சேர்ந்த அரவிந்தசாமி (30) பலியானார். பட்டாசு அறையும் தரைமட்டமானது. இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: