×

நான் பாஜக இல்லை; நான் திராவிட தலைவர்களை பார்த்து வளர்ந்தவன்: திரைப்பட இயக்குநர் பாக்யராஜ்

சென்னை: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என பாக்யராஜ் கூறியது சர்ச்சையானது. இந்நிலையில் இது குறித்து நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்; குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு மாதம், இரண்டு மாதம் முன்பே பிறக்கும் குழந்தைகளை குறை பிரசவம் என்பார்கள், ஆனால் குறை இருக்காது. நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளை நான் அக்கறையுடனே பார்க்கிறேன்; எப்போதும் அப்படியேதான் இருப்பேன். தமிழகத்தில் பிறந்து, தமிழில் படித்து, தமிழ் சினிமா என்று வளர்ந்து வந்துள்ளேன். நான் திராவிட இயக்க தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன், நான் பாஜக அல்ல. திராவிட இயக்க தலைவர்களின் கருத்துகள் அடிப்படையில் எனது சினிமா இருக்கும், இனியும் அது தொடரும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Bajaka ,Bagyaraj , I am not BJP; I grew up watching Dravidian leaders: Film director Bhagyaraj
× RELATED வெறுப்புணர்வைத் தூண்டும் பாஜகவின்...