×

கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் விபரீதம்; வங்கி பெண் அதிகாரி கணவருடன் தற்கொலை: அநாதையான 2 குழந்தைகள்

ஸ்ரீகாளஹஸ்தி: வங்கி கடன் தொல்லையால் வேதனை அடைந்த கணவன், மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வீரப்ப நாயுனிரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவநாகபாஸ்கர் (32), ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார். இவரது மனைவி கவுரி (25). இவர் திருப்பதி மாவட்டம் நகரியில் உள்ள யூனியன் வங்கியில் கேஷியராக பணியாற்றினார்.

இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகள் கிருத்திகா(4), மகன் குசுமந்த்ரெட்டி (1). என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் பணி காரணமாக சிவநாகபாஸ்கர் ஐதராபாத்திலும், கவுரி குழந்தைகளுடன் திருப்பதியிலும் வசித்தனர். இதனால் தம்பதியிடையே மனவேதனை இருந்துள்ளது. எனவே கவுரி  பணியிட மாற்றம் வேண்டி 4 ஆண்டுகளாக மேல் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் சிவநாகபாஸ்கர் வேலையை விட்டுவிட்டு ஏலச்சீட்டு வியாபாரத்தை தொடங்கினார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக  வியாபாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. அங்கு கிருஷ்ணாரெட்டி என்பவரிடம்  நிலப்பத்திரங்களை அடகு வைத்து சுமார் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி தரஇயலாததால் சிவநாகபாஸ்கர் ஐதராபாத்திலிருந்து நகரிக்கு வந்து மனைவியோடு வசித்து வந்துள்ளார்.

ஆனால் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காததால்  அவர்கள் நகரிக்கு வந்து கேட்டுள்ளனர். மேலும் கவுரி பணிபுரியும் வங்கிக்கு சென்று மிரட்டியுள்ளனர். எனவே வங்கியில் லோன் வாங்கி கடனை அடைத்துவிடலாம் என தம்பதியினர் முடிவு செய்தார். ஆனால் வங்கியிலும் உடனடியாக லோன் கிடைக்கவில்லையாம். இதனால் மனவேதனை அடைந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகளை கடந்த 10 நாட்களுக்கு முன் கடப்பா மாவட்டம் பர்வராஜபேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு வீட்டிலேயே இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் புத்தூர் டிஎஸ்பி யஷ்வந்த், நகரி  இன்ஸ்பெக்டர் மத்தைய்ய ஆச்சாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு புத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Disaster due to intimidation by creditors; Bank female officer commits suicide with husband: 2 orphaned children
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...