புதுவை தலைமை செயலர் திடீர் மாற்றம் ஏன்?.. பரபரப்பு தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமை செயலர் அஸ்வனிகுமார், டெல்லிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அருணாசலபிரதேசத்தில் தலைமை செயலராக பணியாற்றும் ராஜீவ் வர்மா, புதுச்சேரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தலைமை செயலராக பதவி வகித்த மனோஜ் பரிதா முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக அப்போதைய கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியதன்பேரில் அவர் அதிரடியாக மாற்றப்பட்டார்.

அவருக்குப் பதிலாக டெல்லியில் பணிபுரிந்த அஸ்வனிகுமார் புதுச்சேரி தலைமை செயலராக கடந்த 2017 நவம்பரில் நியமிக்கப்பட்டார். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, என்ஆர்.காங்., பாஜக இடம்பெற்ற தேஜ கூட்டணி ஆட்சியை பிடித்தது. இக்கூட்டணியின் முதல்வர் ரங்கசாமிக்கும், தலைமை செயலர் அஸ்வனிகுமாருக்கும் இடையே உரசல்கள் இருந்து வந்ததாக கூறப்பட்டது. மக்களுக்கு நலத்திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற தலைமை செயலர் இடையூறாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக தேஜ கூட்டணி அரசு அனுப்பும் முக்கிய கோப்புகளை திருப்பி அனுப்புவதாக தலைமை செயலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவரை மாற்ற வேண்டுமென ஆளும் கூட்டணி தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 24ம்தேதி புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணமாக வரவுள்ளார். இந்த நிலையில் அஸ்வனிகுமார் அதிரடியாக மீண்டும் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: