நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி ஏப்.28ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி வரும் 28ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசின் நலன் கருதி ஆளுநரை எதிர்த்து அமைதி வழியில் போராடுவதற்கும், கருப்பு கொடி காட்டுவதற்கும் உரிமை இருப்பதாக தெரிவித்தார். நிலுவையில் உள்ள மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி வரும் 28ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் நலன் கருதி ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட வேண்டும் என்று அழகிரி தெரிவித்துள்ளார். கற்றறிந்த ஒருவரையே தமிழ்நாட்டிற்கு ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும் என்றும் காவல்துறை மற்றும் உளவுத்துறையில் இருந்து ஆளுநராக வந்த ஆர்.என்.ரவியை எல்லை பகுதியில் மட்டுமே ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Stories: