×

உதகையில் களைகட்ட தொடங்கிய கோடை சீசன்!: மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்..!!

நீலகிரி: உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், மலை ரயிலில் பயணம் செய்வதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் ஊட்டி ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நீலகிரியில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியதால் தின்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையானோர் மலை ரயிலில் பயணம் செய்தபடியே இயற்கை அழகை நேரில் கண்டுகளிக்க விரும்புகின்றனர். இதனால் உதகை மேட்டுபாளையம் இடையிலான மலை ரயிலில் பயணிக்க மே மாதம் இறுதி வரை முன்பதிவு முடிந்துள்ளது.

இதில் முன்பதிவு செய்த பார்வையாளர்கள், குடும்பத்துடன் மலை ரயிலில் பயணம் செய்து எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். உதகையில் இருந்து குன்னூருக்கு செல்வதற்கு, மலை ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் செல்வதற்கு ஒருவருக்கு 320 ரூபாய் கட்டணமும், 2வது வகுப்பு பெட்டியில் செல்ல 140 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உதகை மேட்டுப்பாளையம் இடையே பயணிப்பதற்கு ஒருவருக்கு 540 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. 


Tags : Udagai , Udaipur, summer season, mountain train, tourists
× RELATED உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ..!!