×

தமிழ்நாட்டில் உள்ள 58 மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 58 மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (20.04.2022) புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவில் வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது.  தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

அதன்படி மதுரை மாவட்டம், கீழமாத்தூர், அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், கர்பகநாதகுளம் அருள்மிகு கர்பகநாதசுவாமி திருக்கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், கரூர் மாவட்டம், குளித்தலை, அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி, அருள்மிகு  கோட்டை மாரியம்மன் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், அருள்மிகு வைத்தீஸ்வரன் திருக்கோயில், சேலம் மாவட்டம், அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தருமபுரி மாவட்டம், அருள்மிகு தேசநாதீஸ்வரர் திருக்கோயில், அரியலூர் மாவட்டம், அருள்மிகு ஜெயபுரீஸ்வரர் திருக்கோயில், சாத்தம்பாடி, அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்,  அருள்மிகு திருக்கண்டீஸ்வரர் திருக்கோயில், உட்பட 58 மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திருக்கோயில்களில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.

தமிழ்நாட்டில் 1000 மேற்பட்ட திருக்கோயில்களில் இந்தாண்டு  திருப்பணிகள் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு வாரம் இரண்டு நாட்கள் மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் நடத்தப்பட்டு புராதான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து  பராமரித்தல் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க  அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.  இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் (திருப்பணி)  ஜெயராமன், தலைமைப் பொறியாளர் தட்சினாமூர்த்தி, ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜபட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியர், சந்திரசேகரபட்டர், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர்முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர்கள் மூர்த்தீஸ்வரி, முனைவர் சீ.வசந்தி,  டி.சத்தியமூர்த்தி, இராமமூர்த்தி,  கட்டட மற்றும் சிற்பக்கலை வல்லுநர் K.தட்சினாமூர்த்தி,  சிவானந்தம், உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : State Level Expert Committee ,of Renovations ,Tamil Nadu , In Tamil Nadu, Temple, Tiruppani, Expert Committee Meeting
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து