×

தயாரிப்பாளர் டி.ராமாராவ் மரணம்

சென்னை: தமிழ், இந்தி, தெலுங்கு படங்களை தயாரித்தவரும் இயக்குனருமான டி.ராமாராவ் காலமானார். அவருக்கு வயது 83. சென்னை தி.நகர் பாலாஜி அவென்யூவில் வசித்து வந்த ராமராவ் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை 12.30 மணியளவில் இறந்தார். இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவருக்கு தாதினேனி ஜெய என்ற மனைவியும், மகள்கள் சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா, மகன் அஜய் உள்ளனர்.

ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் பேனரில் தமிழ் படங்களில், விஜய், விக்ரம், ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார். யூத், தில், அருள், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், மலைக்கோட்டை உள்ளிட்ட தமிழ் படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் என்டிஆர், நாகேஸ்வரராவ், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, தேவி, ஜெயப்பிர, ஜெயசுதா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவரான ராமாராவ், தெலுங்கில் நவராத்திரி, ஜீவன தரங்கலு, பிரம்மச்சாரி, ஆலுமகளு, யமகோலா, பிரசிடெண்ட் காரி அப்பாயி, இல்லாலு, பண்டனி ஜீவிதம், பச்சனி காபுரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 1979ல் இந்தி திரையுலகில் நுழைந்த அவர் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஜீதேந்திரா,  சஞ்சய் தத், அனில் கபூர்,

கோவிந்தா, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார். ரஜினிகாந்தை அந்த கானூன் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. ஜூதாய், ஜீவன் தாரா, ஏக் ஹி புக், அந்தா கானூன், இன்குலாப், இன்சாப் கி புகார், வதன் கே ரக்வாலே, தோஸ்தி துஷ்மனி, நாச்சே மயூரி, ஜான் ஜானி ஜனார்தன், ராவன் ராஜ், முகாப்லா, ஹத்காடி, ஜங் ஆகிய பாலிவுட் படங்களை இவர் தயாரித்தார்.

Tags : D. Ramarao , Producer D. Rama Rao dies
× RELATED தெலங்கானாவில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி