×

35வது பிறந்த நாளில் கர்ப்பத்தை அறிவித்த மரியா ஷரபோவா

வாஷிங்டன்: ரஷ்யாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. 35 வயதான இவர் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ரஷ்யாவுக்காக ஆடினாலும் அமெரிக்காவில் தான் வசித்து வருகிறார். 2020ம் ஆண்டு டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற இவர், நேற்று  தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் படத்தை  வெளியிட்டுள்ளார். இதில் விலைமதிப்பற்ற தொடக்கம், இருவருக்கு பிறந்தநாள் கேக் சாப்பிடுவது எப்போதுமே எனது சிறப்பு என பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்கேஸ் என்பவரை ஷரபோவா காதலித்து வருகிறார். அலெக்சாண்டர் இங்கிலாந்து இளவரசர் வில்லியம், ஹாரியின் நண்பர். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இதன்பின்னர் ஷரபோவாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அலெக்சாண்டர்-மரிய ஷரபோவா நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்நிலையில் ஷரபோவா கர்ப்பம் அடைந்துள்ளதாக அறிவித்து வெளியிட்டுள்ள படம் வைரலாகி வருகிறது.

Tags : Maria Sharapova , Maria Sharapova announces pregnancy on her 35th birthday
× RELATED 35வது பிறந்த நாளில் கர்ப்பத்தை அறிவித்த மரியா ஷரபோவா