×

சென்னை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் எம்எல்ஏ.க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: மேல்நிலை கம்பிகளை, புதைவட கம்பிகளாக மாற்றும் பணி சென்னை மாநகராட்சியின் பெரம்பூர்,தாம்பரம், ஆவடி, அடையாறு உள்ளிட்ட கோட்டங்களில் ரூ.1,011 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் ரூ.730 கோடி மதிப்பீட்டிலான பணிகள் வரும் செப்டம்பரில் நிறைவடையும். சென்னை மாநகராட்சியின் விரிவுபடுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  தற்போது நடைபெற்று வரும் பணிகள் முடிவுற்ற பின், தேவைப்படக்கூடிய இடங்களில், மேல்நிலை மின் கம்பிகளை, புதைவட கம்பிகளாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

Tags : Chennai Corporation ,Minister ,Senthilpalaji , Chennai Corporation, Fossil Wire, Work, Senthilpology
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...