புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 3 இடங்களில் மீன்பிடித் திருவிழாக்கள் கோலாகலம்!: ஜாதி, மதம் பேதமின்றி மீன்பிடித்து மக்கள் உற்சாகம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 3 இடங்களில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் மீன்பிடித்து மகிழ்ந்தனர். தற்போது அறுவடை காலம் முடிந்ததால் விராலிமலைக்கு உட்பட்ட தென்னங்குடி, கத்தலூர், தேராவூர், மேட்டுப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ஜாதி, மதம் பேதமின்றி சமூக நல்லிணக்கத்துடன் பங்கேற்று விரால், கெண்டை, கெழுத்தி, குரவை உள்பட பல்வேறு வகையான மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே கல்லம்பட்டியில் உள்ள ஏத்தி கண்மாயில் கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்ததால் மீன்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் இன்று நடந்த மீன்பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் கண்மாயில் ஆர்வமுடன் இறங்கி கூடை உள்ளிட்ட சாதனங்களில் மீன் பிடித்தனர். இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 கிலோ வரை கட்லா, கெழுத்தி, ஜிலேபி உள்பட மீன்கள் கிடைத்தன. இவற்றை கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

Related Stories: