×

தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டம்?: ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதிக்குஅப்பால் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் 60 முதல் 80 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின்  பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 2019-ம் ஆண்டு துல்லிய தாக்குதல் மூலம் அழித்தது. அதன்பிறகு எல்லையோரம் இருந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடி விட்டதாகவும், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சில வாரங்கள் மீண்டும் இயங்க தொடங்கிய அந்த முகாம்கள் பின்னர் அகற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக்கு அப்பால் தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது. அங்கு 60 முதல் 80 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், அவர்கள் அனைவரும் ஆப்கானில் நடந்த போரில் பங்கேற்று திரும்பியவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளதாக காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது.       


Tags : Pakistan ,India ,Jammu ,Kashmir , Terrorist, India, Pakistan, Jammu and Kashmir, Police
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!