×

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் முகாம்-மருத்துவ பரிசோதனை நடந்தது

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. அரசு உதவிகள், பயண சலுகை, உதவி உபகரணங்கள் பெற அடையாள அட்டை அவசியம் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிள் அனைவரையும் தனித்தனியே மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பாதிப்பின் தன்மை மற்றும் பாதிப்பு சதவீதம் குறித்து சான்று அளித்தனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் அடையாள ஆவணங்கள் சரிபார்த்தல், பதிவேடுகளில் பதிவு செய்தல் போன்ற பணிகள் நடந்தன.

இந்நிலையில், நேற்று நடந்த முகாமில் 230 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பெரணமல்லூர்: பெரணமல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் சங்கர், பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் இசையருவி முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா வரவேற்றார்.

முகாைம ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன் கொண்டு தொடங்கி வைத்தார். முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சதவீதத்தை கண்டறிந்து அவர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல், பழைய அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் 10 வயது மேற்பட்ட மாணவர்களுக்கு நல வாரியத்தில் பதிவு செய்தல் என சான்று அளித்தனர். முடிவில், கூடுதல் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

செங்கம்: செங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 1 முதல் 18 வயது உடைய மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மதிவாணன், கோபி, கலாவதி, ஜெயபாரதி, விஜயராகவன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன் வரவேற்றார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 116 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.இதில், ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரபாகரன், ஆர்த்தி, கார்த்திகேயன் மற்றும் சிறப்பாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்‌. முடிவில், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வைரம்மாள் நன்றி கூறினார்.

Tags : Thiruvannamala , Thiruvannamalai: A camp was held in Thiruvannamalai to issue the ID card for the disabled. Thiruvannamalai Collector
× RELATED இந்தியா கூட்டணியே தமிழ்நாட்டின்...