×

ஆப்கானிஸ்தானில் இரு பள்ளிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு!: உறவுகளை இழந்து கதறும் குடும்பத்தினர்..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் இரு பள்ளிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் காபூல் அருகே தர் ஷி பர்ச்சி என்ற இடத்தில் அப்துல் ரஹீம் ஷாகித் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இந்த பகுதியில் ஷியா ஹசாரா சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களை குறி வைத்து சன்னி தீவிரவாத குழுக்கள்  தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்த குண்டு வெடிப்பில் ஷியா சமூகத்தை சேர்ந்த சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் காயமடைந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதேபோல அதே பகுதியில் உள்ள மும்தாஜ் பள்ளியிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரு சம்பவங்களில் மொத்தமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளனர். இதனால், ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த நாசவேலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Tags : Afghanistan , Afghanistan, school, bomb, 20 dead
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை