திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி திரவுபதியம்மன் கோயில் தேர்த்திருவிழா

திருக்கோவிலூர் :  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தீமிதி மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம், கடந்த 2 வருடமாக கொேரானா தொற்றால்  திருவிழா நடைபெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் 4ம் தேதி திரவுபதி அம்மன் கோயில் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியோடு தொடங்கியது.  இதனையொட்டி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் தினந்தோறும் இரவில் சாமி வீதியுலா நடந்தது.

இந்நிலையில் கடைசிநாளான நேற்று  முன்தினம் 17 டன் எடையுள்ள அலங்கரிப்பட்ட தேரில் கிருஷ்ணன், அரச்சுனன், திரௌபதி அம்மனை வைத்து தோளில் சுமந்து கொண்டு கோயிலில் இருந்து புறப்பட்டு ஊரை மூன்று  முறை சுற்றி வந்து பின்னர் நேற்று கோயிலை வந்தடைந்து. திருவிழாவில் நிறைவு நிகழ்ச்சியாக பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். திருவிழா நான்கு வருடத்திற்கு பின் நடைபெற்றதால் வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: