×

ஐ.டி. கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு வரும் செப்டம்பர் முதல் விசா நேர்காணல்: தூதரகம் அறிவிப்பு

சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான ஆலோசகர் டொனால்ட் ஹெப்லென் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் விசா நடைமுறைகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படுவதாக கூறினார். ஐ.டி. கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு செப்டம்பர் மாதம் முதல் விசா நேர்காணலுக்காக தேதி ஒதுக்கப்படும்.

மாணவர்களுக்கு மே 2வது வாரத்தில் விசா நேர்காணலுக்காக தேதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா காலத்திற்கு முன்பு 12 லட்சம் வீசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 8 லட்சம் வீசாக்கள் வழங்கப்பட இருப்பதாகவும் கூறினார். அவசரத் தேவைக்காக அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என குறிப்பிட்ட அவர், பொய் கூறி அவசரத் தேவை வசதியை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது தூதரக சேவைகளுக்கான தலைவர் கேத்தரின் உடன் இருந்தார்.

Tags : GI TT ,United States , IT Company, USA, Visa Interview, Embassy
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...