×

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுஇடத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமே: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுஇடத்தில் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் உயிர் பிழைப்பதே அதிசயம் என்ற நிலையில் இருந்து தற்போது ஓரளவு மீண்டு வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக குறைந்து வந்த கோரானா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்தான். முகக்கவசம் அணியாவிடில் அபராதம் என்பது மட்டும்தான் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்ப பெறப்படவில்லை என்று குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது என கூறினார். விபத்தில் சிக்கியவர்களை வேண்டுமென்றே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.


Tags : Tamil Nadu ,Minister ,Ma Subramanian , Tamil Nadu, Corona, Mask, Minister Ma. Subramanian
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...