கரூர் அருகே பெயிண்டர் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் அமர்வு நீதிமன்றம் உத்தரவு

கரூர்: கரூர் அருகே பெயிண்டரை வெட்டி கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் என்ற இடத்தில் வசித்து வந்த பாஸ்கர் என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு இரவு தனது வீட்டிற்கு வெளியே வராண்டாவில் படுத்திருந்த பாஸ்கரை முன் விரோதம் காரணமாக உருட்டுக்கட்டையால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் மர்ம கும்பல் கொலை செய்தது.

கணவரை கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி பவித்ரா அளித்த புகாரின் பேரில் சரவணன், பாலசுப்பிரமணியம், சுசீலா ஜெயபால், ஜீவா ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, கைது செய்தனர். கடந்த 2 வருடங்களாக கரூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளிகளாக சரவணன், பாலன் (எ) பாலசுப்பிரமணியம், ஜெயபால், ஜீவா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Related Stories: