உ.பி.யில் அனுமதியின்றி மத ஊர்வலம் நடத்தக்கூடாது: முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ:  உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் அனுமதியின்றி மத ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அனுமதி பெற்ற ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படாது என்று பிரமாண பத்திரம் சமர்பிக்க வேண்டும்.

ரம்ஜான் மற்றும் அக்‌ஷயதிருதியை ஒரே நாளில் வருவதால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அடுத்த மாதம் 4ம் தேதி வரை போலீசார் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், விடுமுறையில் இருப்பவர்கள் உடனடியாக அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: