×

டிடிவியுடன் உச்சக்கட்ட மோதல் சசிகலாவை வரவேற்ற அமமுக நிர்வாகிகள் நீக்கம்: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: சமீபகாலமாக, சசிகலா- டிடிவி தினகரன் இடையே பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. டிடிவியிடம் இருந்த மிக முக்கியமான பொறுப்பு, சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் பெயருக்கு சென்றது தான் மோதல் முற்றியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு,  தான் சொல்வதை சசிகலா கேட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் நினைத்தாராம். ஆனால், தற்போது டிடிவி சொல்வது எதையும் சசிகலா கேட்பது இல்லை.

இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனை ஓரங்கட்டும் முயற்சியில் சசிகலா தீவிரமாக இறங்கியுள்ளார். மேலும், அமமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளுக்கு சசிகலா அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சசிகலா தன்னை கழற்றிவிட முடிவு செய்துள்ள தகவல் டிடிவி.தினகரனுக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தஞ்சையில் கடந்த மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா வந்தார். சசிகலா அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற பிறகு டிடிவி.தினகரன் தனியாக வந்து சென்றார். அப்ேபாதே சசிகலா- டிடிவி தினகரன் இடையே மோதல் வெளியே தெரிய தொடங்கியது.

இந்த நிலையில், கடந்த 11ம் தேதி சேலம் செல்வதற்காக திருச்சிக்கு சசிகலா வந்தார். அப்போது அவர், திருச்சி சமயபுரம் கோயில் மற்றும் முசிறி பகுதிகளில் உள்ள உத்தமர் கோயில், திருவாசி சிவாலயம், குணசீலம் பெருமாள் கோயில், வெள்ளூர் சிவாலயம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்தார். அப்போது அவரை திருச்சி வடக்கு மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாலகுமார், முசிறி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் முசிறி நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் வரவேற்றனர். இந்த நிலையில், பாலகுமார், செந்தில்குமார், ராமசாமி ஆகியோர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக டிடிவி.தினகரன் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார். சசிகலாவை வரவேற்றதால் தான் இவர்கள் கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து அமமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘திருச்சிக்கு வரும் சசிகலாவை வரவேற்க அமமுக நிர்வாகிகள் யாரும் செல்லக்கூடாது என மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு வந்தது. அந்த உத்தரவையும் மீறி திருச்சிக்கு வந்த சசிகலாவை, அமமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இது டிடிவி.தினகரனுக்கு பிடிக்கவில்லை. உடனே அவர்களை கட்சியில் இருந்து நீக்கினால், சலசலப்பு ஏற்படும் என்பதால் தற்ேபாது அவர்களை நீக்கியுள்ளார். இதன் மூலம் சசிகலா-டிடிவி தினகரன் இடையயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது” என்றனர்.

கூடாரம் காலியாகிறது
சசிகலாவை வரவேற்ற அமமுக நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதனால் டிடிவி மீது சசிகலா கடும் கோபத்தில் உள்ளாராம். அமமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள்தான். டிடிவி. தினகரனுக்கு பாடம் புகட்டும் வகையில் அமமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை வெளியேற்ற சசிகலா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அமமுக கூடாரம் விரைவில் காலியாகி விடும் என சசிகலாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். டிடிவி- சசிகலா இடையே தற்போது நடந்து வரும் பனிப்போரை இபிஎஸ் ஆதரவாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Tags : Sasikala ,DTV , DTV, Sasikala, Aam Aadmi executives
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!