காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை

சென்னை: நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து 2020ம் ஆண்டு மணந்தார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு காஜல் கர்ப்பம் ஆனார். இதையடுத்து புதிய படங்கள் எதையும் அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காஜலுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: