தெலுங்கு பட தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் மரணம்

ஐதராபாத்: தெலுங்கு பட தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த மூத்த டோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங் (76), உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், சிவகார்த்திகேயன் உள்பட திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது.  மறைந்த நாராயண் தாஸ் நரங்கின் மகன் சுனில் நரங்கும் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நாராயண் தாஸ் நரங், கடந்த 1980களில் திரைத்துறையில் கேஷியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். லவ் ஸ்டோரி, தி கோஸ்ட், லக்‌ஷ்யா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். ஐதராபாத்தில் அமைந்துள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும் அவர் இருந்தார்.

Related Stories: