×

பயண நூல் வெளியீட்டு விழா நான் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேச்சு

சென்னை: தெலுங்கானா ஆளுநராக 2 ஆண்டுகள், புதுவை துணைநிலை ஆளுநராக ஓராண்டு பணியாற்றும் தமிழிசை சவுந்தர்ராஜனின் பயண புத்தக வெளியீட்டு விழா கிண்டி நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்கள், விமர்சகர்கள்  ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பணிகளை பாராட்டி பேசினர். இந்த விழாவில், பயண புத்தகத்தை தமிழிசை சவுந்தர்ராஜன் வெளியிட அவரது கணவர் டாக்டர் சவுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டார்.

 ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஏற்புரையில் பேசியதாவது:   அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறேன் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இல்லை , நான்  அன்பை மட்டுமே பயன்படுத்துகிறேன். தமிழகத்தில் தமிழ் பெண்ணாக வளம் வந்து ஆளுநராக பணியாற்றி வருகிறேன்‌. அடிப்படையில் எளிமையாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கிறேன்.


தெலுங்கானாவில் வலிமையான ஒருவரை ஆளுநராக நியமிக்க இருப்பதாக வதந்திகள் பரப்புகிறார்கள். பெண் என்றால் வலிமை இல்லையா? பெண்ணான எனக்கு இருக்கும் வலிமை வேறு யாருக்கும் இருக்க வாய்பில்லை. நான் எங்கு சென்று பணியாற்றினாலும் நான் பிறந்த தமிழ் நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது பிரதான ஆசை. முதல்வரின் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக விமர்சனங்களை வைக்கிறார்கள். ஆனால் என்பணி குறித்து புதுச்சேரி முதலமைச்சர் பாராட்டு தெரிவிக்கிறார்.

அதேசமயம் தெலங்கானா முதல்வரோ என் பணிகள் மீதான விமர்சனங்களை அடுக்குகிறார். ஆளுநரும் முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதற்கு புதுச்சேரி ஒரு சிறந்த உதாரணம்.  அதேசமயம் ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி குறையும் என்பதற்கு தெலுங்கானா மற்றொரு உதாரணம். நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது. ஜனநாயக வழியில் இருக்க வேண்டிய முதல்வர்கள் சில இடங்களில் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்கள்.



Tags : Saundarajan , Travel Book Launch Ceremony, Rubber Stamp, Tamilisai Saundarajan,
× RELATED தெலங்கானா ராஜ்பவனில் நடைபெற்ற...