×

மடங்களுக்கு நிதி விடுவிக்க 30% கமிஷன் கேட்கும் அதிகாரிகள்: கர்நாடக பாஜ அரசு மீது மடாதிபதி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.4 கோடி மதிப்பில் சாலைப் பணி மேற்கொண்ட பாஜ ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் அதற்கான பில் தொகை கேட்டபோது, மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்டதால்  தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கதக் மாவட்டம் பேளகி தாலுகா பாடகண்டியில்  ஷிரகட்டி ஜகத்குரு பகீரா திங்கலேஸ்வரா சுவாமிகள் பங்கேற்று பேசுகையில், ‘அரசின் சார்பில் மடங்களுக்கு நிதிகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிதியை பெறுவதற்கு கூட 30 சதவீதம் கமிஷன் வழங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது’’ என அதிரடியாக குற்றம் சுமத்தினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை பதில் அளிக்கையில், ‘லஞ்சம் கேட்டது யார்? எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விபரங்களை சுவாமிகள் அரசிடம் தெரிவிக்க வேண்டும்’ என்றார். இதற்கு சுவாமிகள் அளித்த பதிலில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கப்படும் போது அவ்வாறு ரசீது வழங்கப்படுகிறதா?

லஞ்சம் என்பது வெளிப்படையாக யாரும் கொடுப்பது கிடையாது. அதே நேரம் கதக் மற்றும் ஷிரட்டி நில வங்கியை சேர்ந்தவர்கள் என்னிடம் ரூ.25 லட்சம் கேட்கிறார்கள் என நானே கூறுகிறேன். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?’’ என்றார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Abbot ,BJP government ,Karnataka , Monasteries Finance, Commission, Officials, BJP Government of Karnataka,
× RELATED தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்...