×

பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. ஆளும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில்  இம்ரான் கான் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிரதமரின் மத்திய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. 31 மத்திய அமைச்சர்கள் மற்றும் 3 மாநில அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு செனட் தலைவர் சாதிக் சஞ்ராணி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியை சேர்ந்த 13 பேர்  மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 9 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜேயூஎல்-எப் கட்சியை சேர்ந்த 4 பேர் மற்றும் எம்கியூஎம் -பியை சேர்ந்த இருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிஏபி, பிஎம்எல்-க்யூ மற்றும் ஜேடபிள்யூபி கட்சியை  சேர்ந்த தலா ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Pakistan , Pakistan, Minister, Inauguration
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...