விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் காமராஜர் படம்

சென்னை: சென்னை விமான நிலையம் மீனம்பாக்கத்திலிருந்து திரிசூலத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக சர்வதேச முணையம், உள்நாட்டு முனையம் என்று 2 முனையங்கள் அமைக்கப்பட்டது. அப்போது, அதில் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் உள்நாட்டு முனையம் என்றும், சர்வதேச முனையத்திற்கு அண்ணா சர்வதேச முணையம் என்றும் இந்திய விமானநிலைய ஆணையம் பெயர்களை சூட்டியது. அதோடு உள்நாட்டு முனையத்தில் காமராஜர் படம், சர்வதேச முனையத்தில் அண்ணா படமும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2008ம் ஆண்டு இந்த இரண்டு முனையங்களையும் புதுப்பித்து கட்டும் பணி நடந்தது. அப்போது இரண்டு முனையங்களில் உள்ள காமராஜர், அண்ணா படங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்தில் வலதுபுறமாக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் படம் மீண்டும் வைக்கப்பட்டது.

Related Stories: