×

இசிஆரில் சாலைப்பணிகள்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அமைச்சர் எ.வ.வேலு: மாமல்லபுரம் ஒரு வழிச்சாலையாக இருந்ததை கிழக்கு கடற்கரை சாலையாக பெயரை வைத்து கலைஞர் செம்மைப்படுத்தினார். கலைஞர் தான் அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னார். இப்படி பட்ட நிலையில் தான் இந்த சாலையை நாங்கள் எடுத்து கொள்கிறோம் என தேசிய நெடுஞ்சாலையின் கடிதம் கிடைக்கப்பெற்றது. தமிழக அரசு சார்பாக இசிஆர் சாலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படி ஒப்படைக்கின்ற நிலையில் தான், நமக்கு என்ஓசி கொடுக்க வேண்டும். அப்போது ஒரு கடிதம் வந்தது. அவர்களே முன் வந்து இந்த சாலைகளை நாங்களே எடுத்து கொள்கிறோம் என்று எடுத்து கொண்டனர். அதோடு மட்டுமல்ல, நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது. 707 கோடி ரூபாய்க்கு மகாபலிபுரம் முதல் முகையூர் டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அதே போல் முகையூர் - மரக்காணம் ரூ.792 கோடி டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.

மரக்காணம் - புதுவை  வரை திட்டமிடல் போடப்பட்டு ஒப்பந்தம் விட தேசிய நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை உங்களிடம் ஒப்படைத்து விட்டோம். வசூல் நாங்கள் செய்கிறோம் என தெரிவித்தோம். அதற்கு வாய்மொழியாக 4 வழிச்சாலையாக போடுகிற வரை நீங்கள் வசூல் செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருக்கிறார்கள். அப்படி இருந்தும் முதல்வரிடம் இந்த விஷயங்களை எடுத்துக் கூறினோம். இந்த சாலை முக்கியமானது என்று ஒப்புதல் வழங்க சொன்னார். அதன்படி 11.04.2022 அன்று தடையின்மை சான்றிதழ் (என்ஓசி) வழங்கப்பட்டது. பத்திரிகையில் ஒரு தவறான செய்தி வந்துள்ளது. சட்டமன்றத்தில் நான் பதிவு செய்வது தான் உண்மையான செய்தி. இசிஆர் சாலை ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை மூலமாக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.


Tags : Minister ,EV Velu , Road Works in ECR: Information by Minister EV Velu
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...