பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது. ஆந்திரா – புதுச்சேரி வரை நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் மோசமடைந்துள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும்போது நகரமும் அழகாகும், அதை பராமரிப்பதில் மக்களுக்கு பங்கு உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில், பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Related Stories: