×

சொந்த தொகுதிக்கு வந்தபோது வரவேற்பு நிகழ்ச்சியில் திடீர் தீ: அமைச்சர் ரோஜா ‘அப்செட்’

திருமலை: அமைச்சராக பதவியேற்ற பின் தனது சொந்த தொகுதிக்கு வந்தபோது நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் நடிகை ரோஜா அதிர்ச்சியடைந்தார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் 2ம்கட்ட அமைச்சரவை கடந்த வாரம் பதவி ஏற்றது. இதில் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜாவுக்கு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை வழங்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற ரோஜா, முதன்முதலாக நேற்று தனது சொந்த தொகுதிக்கு வந்தார்.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து நகரி வரை அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் என நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் பின்தொடர்ந்து வந்தனர். நகரி தொகுதிக்கு வந்த அவரை வரவேற்க பத்தாயிரம் வாலா சரவெடி வெடிக்கப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் தோரணங்கள் மீது பட்டாசு பொறி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்த தொண்டர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். பின்னர் நீண்ட முயற்சிக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்ைல. ஆனால் அமைச்சராக பொறுப்பேற்று சொந்த தொகுதிக்கு முதன்முறையாக வந்தபோது வரவேற்பு நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டதால் ரோஜா கடும் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Minister ,Roja , Sudden fire at the reception when he came to his own constituency: Minister Roja 'upset'
× RELATED ஆந்திராவில் மே 13ம் தேதி தேர்தல்...