×

பணம் சம்பாதிக்கும் ஆசையில் குடும்ப பெண்களின் படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்: பட்டதாரி வாலிபர் கைது; ஓட்டேரியில் பரபரப்பு

பெரம்பூர்: பணம் சம்பாதிக்கும் ஆசையில் குடும்ப பெண்களின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (21). பிகாம் பட்டதாரி. இவர் பாடி லூகாசில் உள்ள தனியார் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது செல்போனை உறவினர்கள் எதேச்சையாக பார்த்துள்ளனர்.

அதில், கிருஷ்ணாவின் தாய், பெரியம்மா, அத்தை மற்றும் அத்தையின் மகள் என பலரது புகைப்படங்கள் நிர்வாணமாக மார்பிங் செய்யப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர்களது உறவினர்களே ஓட்டேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். இதையடுத்து கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு: இன்ஸ்டாகிராமில் நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டால் அதன் மூலமாக பல லட்சம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது.

அதனால் குடும்பத்தில் உள்ள பெண்கள், வீட்டை சுத்தம் செய்யும்போதும், துணி துவைக்கும் போது துணி சற்று விலகி இருக்கும்போதும், அவர்களுக்கு தெரியாமல் எனது செல்போனில் படம் பிடித்து கொள்வேன். மேலும், ஆடைகள் எப்போதெல்லாம் விலகி இருக்கிறதோ அதை, சந்தேகம் இல்லாத வகையில் படம் எடுத்து கொள்வேன். அந்த புகைப்படங்களை எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தேன். வடமாநிலங்களில், குடும்ப பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பார்ப்பதற்கு 500 ரூபாய் கட்டினால் போதும் என்பன போன்ற இணையதளம் நடத்தப்பட்டு வருவதாக அறிந்தேன்.

அதை மையமாக வைத்து பணம் சம்பாதிக்கும் ஆசையில், எனது குடும்ப பெண்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக பதிவேற்றினேன். பின்னர் பணம் வரும் என காத்திருந்தேன். இதுவரையில் எந்த பணமும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதால் அவரை மனநல மருத்துவரிடம் காண்பிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். குடும்ப பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து அதனை நிர்வாணமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ottery , Naked morphing image of family women in the pursuit of money and uploading it on Instagram: Graduate teenager arrested; Excitement in Ottery
× RELATED வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மெடிக்கல் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை!!