நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்: வானிலை மையம் தகவல்

சென்னை: இன்று தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்படுகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. நாளை மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடவில்லை. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 6, நிலக்கோட்டை, சுருளக்கோடு, வால்பாறையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

Related Stories: