×

சென்னையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்: சென்னை போலீஸ் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வரும் காலங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் பள்ளி மாணவர்கள் 111 பேர், கல்லூரி மாணவர்கள் 43 பேர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். பேருந்து படிக்கட்டில் நின்று பயணித்த மாணவர்களை கீழே இறக்கிவிட்டு போலீசார் அறிவுரை வழங்கினர். மாணவர்களின் பள்ளி, வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்த போலீஸ், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது.


Tags : Chennai ,Chennai Police , Chennai, Bus Stairs, Students, Case, Chennai Police
× RELATED சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில்...