தீ தொண்டு வார விழாவையொட்டி அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தீ தொண்டு வார விழாவையொட்டி தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலையம் சார்பில் நேற்று நாட்றம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தீ தொண்டு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் கலைமணி தலைமை தாங்கி மாணவிகளுக்கு கோடைகாலத்தில் தீ தடுப்பு மற்றும் பஞ்சபூதங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: