×

திருப்புத்தூர் அருகே பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா : கட்லா, ஜிலேபி சிக்கின

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டியில் நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர். திருப்புத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் மழை பெய்து கண்மாய் நிரம்பியதும் விவசாய பணி முடிந்ததும் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். தற்போது விவசாய பணிகள் முடிவடைந்ததால் ஊர்குளத்தான்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது.

இதற்காக ஊர்குளத்தான்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அதிகாலை முதலே கண்மாயில் குவிந்தனர். மீன் பிடிக்க அனுமதி கிடைத்ததும் மறுநொடியே காத்திருந்த மக்கள் வேகமாக ஓடிச்சென்று பாரம்பரிய முறைப்படி கையால் முடையப்பட்ட ஊத்தா கூடை மூலம் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் குரவை, விரா, கட்லா, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கண்மாயில் மீன் பிடி திருவிழா நடத்தினால் விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Tags : -eyed ,Tiruputhur ,Jilepi , Tiruputhur, Big Eye, Fishing, Festival
× RELATED திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு