சீர்காழி அருகே ஊராட்சிக்கு சொந்தமான மரங்கள் வெட்டி கடத்தல்: போலீசில் புகார்

சீர்காழி: சீர்காழி அருகே தென்னாம்பட்டினத்தில் ஊராட்சிக்கு சொந்தமான ரூ.5 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சிக்கு சொந்தமான கருப்பந்தி தோப்பில் 40 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட பழமையான வேம்பு, சவுக்கு உள்ளிட்ட மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுவிட்டனர். இது குறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகம் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல லட்சம் மதிப்பிலான மரங்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி ஊராட்சிக்கு சொந்தமான மரங்களை கடத்தி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: