×

சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வேன் மோதி மாணவர் இறந்த விவகாரம்: பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் முதன்மை கல்வி அதிகாரி பணிநீக்கம் செய்ததுள்ளார். பள்ளி முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்துக்கு குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த மாதம் வளசரவாக்கத்தில் ஆழ்வார்திருநகரில் உள்ள பள்ளியில் வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்தார்.  தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

 இதையடுத்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் உள்பட 3 பேரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Valasaravakkam , In Chennai Valasaravakkam, school van, collision, 3 persons, dismissal
× RELATED பூந்தமல்லி அருகே பரபரப்பு...