ஏஜிஎஸ் கோப்பை ஹாக்கி ராஜஸ்தான் வெற்றி

சென்னை: இந்திய தலைமை கணக்காளர் மற்றும் கணக்கு தணிக்கை அலுவலகங்களுக்கு (ஏஜிஎஸ்) இடையிலான ஹாக்கி போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் ஏ பிரிவில்  ஐதராபாத்,  குவாலியர், ஒடிஷா, அரியானா அணிகளும், பி பிரிவில் ஜெய்பூர், கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்க  அணிகளும் இடம் பெற்றுள்ளன. எழும்பூர் ஹாக்கி  அரங்கில் நடக்கும் இப்போட்டியை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  தலைவர் லதா தொடங்கி வைத்தார்.  தமிழக அரசின்  முதன்மை செயலாளர்  பங்கஜ்குமார் பன்சால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இறுதிப்போட்டி ஏப்.22ம் தேதி நடக்க உள்ளது. நேற்று நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் மத்திய பிரதேசம் 4-2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது. பி பிரிவு லீக் ஆட்டத்தில்   ராஜஸ்தான் 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வென்றது.

Related Stories: