நரவானே விரைவில் ஓய்வு பெறும் நிலையில் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்

புதுடெல்லி: நாட்டின் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர்  தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தற்போது ராணுவ தளபதியாக உள்ள ஜெனரல் எம்.எம்.நரவானே இம்மாதம் இறுதியில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், நாட்டின் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர்  தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரை சேர்ந்த மனோஜ்  பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றவர். 1982ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வரும் மனோஜ் பாண்டே,  இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபார் பிரிவு  தளபதியாகவும் பணியாற்றியவர். பல்வேறு அதிரடி தாக்குதலுக்கு தலைமை தாங்கி  வெற்றிகரமாக நடத்தியுள்ள மனோஜ் பாண்ேட, அனைத்து விதமான அமைப்பிலும் பணியாற்றிய  அனுபவம் கொண்டவர்.

முப்படை தலைமை தளபதி யார்?: இதற்கிடையே, நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபிவ் ராவத் மறைவுக்கு பிறகு அப்பதவி கடந்த 4 மாதமாக காலியாக உள்ளது. எனவே தற்போதைய ராணுவ தளபதி நரவானே ஓய்வு பெற்றதும், அவர் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படுார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப்படை தளபதியான ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி, கடற்படைத் தளபதியான அட்மிரல் ஆர்.ஹரி குமார் ஆகியோரை விட நரவானே மூத்தவர் என்பதால் அவர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Related Stories: