சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை மறுபதிவிடுவதை ஏற்க முடியாது: எஸ்வி.சேகருக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்தபோது, ஆளுநர் மாளிகையில் பெண் பத்திரிகையாளர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மறுபதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு’ செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது நீதிபதி, ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்திருந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், கடந்த 2020ம் ஆண்டில் சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை நடிகர் எஸ்.வி.சேகர் ரீடிவிட் செய்துள்ளார். பின்னர் அதனை நீக்கியுள்ளார் என்று கூறி அதற்கான பதிவுகளை தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி மற்ற பதிவுகளை அவர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்று கொள்ளலாம். ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்று கொள்ள முடியாது. சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இதுபோன்ற அறுவறுக்கத்தக்க தகவல்களை மறுபதிவு செய்யும் செயலை ஏற்று கொள்ள முடியாதது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எஸ் வி.சேகர் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: