யுவன் சாதா கருப்பு நான் அண்டங்காக்கா கருப்பு: அண்ணாமலையே சொல்றார்

சென்னை: புத்தக முன்னுரை ஒன்றில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா புகழ்ந்தது பரபரப்பாகி உள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு இடையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, ‘கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்’ என இன்ஸ்டாகிராமில் கருப்பு சட்டையுடன் தனது புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். யுவனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுதொடர்பாக சென்னை போரூரில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை, ‘‘யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடன் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்புத் தமிழன், கருப்பு திராவிடன் யாருமில்லை. அவரை விட நான் கருப்பு. அவர் சாதா கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இது தொடர்பான கேள்விக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்’’ என்று கூறினார்.

Related Stories: