கோட்டையில் நாங்கள் திட்டங்களை தீட்டீனாலும், திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் காரணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தந்தை பெரியார் எண்ணியவாறு இன்று பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி வருகிறோம். அரசு தீட்டும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகிகளிடம் தான் உள்ளது. பேரூராட்சி தலைவர் – துணை தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில், உள்ளாட்சி  பிரதிநிதிகளை நம்பி அரசின் திட்டங்கள் ஒப்படைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார். மேலும், உங்களிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செய்ய வேண்டும். மக்களோடு மக்களாக இருந்தால் தான் நமக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள். நான் மக்களோடு மக்களாக இருந்ததால் தான் 2-வது முறையும் மேயராக தேர்வு செய்யப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் காரணமாக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: