நீலகிரி மாவட்ட கலெக்டர் பங்களாவில் உலா வந்த சிறுத்தை

ஊட்டி: நீலகிரி மாவட்ட கலெக்டர் பங்களாவில் சிறுத்தை உலாவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டரின் பங்களா மற்றும் முகாம் அலுவலகம், பிங்கர்போஸ்ட் அருகே  அமைந்துள்ளது. தற்போது, மாவட்ட கலெக்டராக உள்ளவர் அம்ரீத். இவர், இங்கு வசித்து வருகிறார். இந்த பங்களாவில் நுழைவுவாயில் பகுதியில் இருந்து சாலை மற்றும் இருபுறமும் புல்வெளிகளுடன் கூடிய சிறு பூங்கா உள்ளது. சுற்றிலும் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

பங்களா அருகே வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, கலெக்டர் பங்களாக வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள சாலையில் ஹாயாக உலா வந்தது. கலெக்டரின் கார் பார்க்கிங் வரை சாவகாசமாக நடந்து வந்த அந்த சிறுத்தை, மேற்புறம் உள்ள மலர் செடிகளுக்கு நடுவே ஏறி தடுப்புச்சுவரை தாண்டி வெளியில் குதித்து மறைந்தது.

சிறுத்தை நடமாடிய காட்சிகள் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: