இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய மனோஜ் பாண்டே ராணுவ தளபதியாக நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: இந்திய ராணுவத்தின் தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர் ராணுவ தளபதியாக முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். நாக்பூரைச் சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகாடெமியில் கல்வி பயின்றார். இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய மனோஜ் பாண்டே புதிய ராணுவ தளபதியாக மத்திய அரசு நியமித்துள்ளது.  

ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர் ஒருவர் ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இவர் 1982 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார். நாக்பூரை சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு  அகாடமியில் பணியாற்றியுள்ளார். இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான், நிக்கோபார் பிரிவு தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

Related Stories: