‘செக்ஸ்’ சாட் விவகாரத்தில் சிக்கிய சிவசேனா எம்எல்ஏவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை: மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: ‘செக்ஸ்’ சாட் விவகாரத்தில் சிக்கிய ஆளும் சிவசேனா எம்எல்ஏவின் மனைவி ரஜினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மகாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் குர்லா அடுத்த நேரு நகர் பகுதியில் ஆளும் சிவசேனா எம்எல்ஏ மங்கேஷ் குடால்கர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் எம்எல்ஏவின் மனைவியான ரஜினி, வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து எம்எல்ஏவின் வீட்டு ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என்று தெரியவந்தது. ஆனால் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்பதால், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எம்எல்ஏ வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தற்கொலை குறிப்பு கடிதம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்  எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் திரளானோர் அவரது இல்லம் முன்பு திரண்டனர். தற்கொலை வழக்காகத் தெரிந்தாலும் கூட, மகாராஷ்டிரா காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு எம்எல்ஏ மங்கேஷின் பெயர் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்தது. அதாவது ஆன்லைனில் இவருடன் ‘செக்ஸ்’ சாட் செய்து சிலர் 5 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பதுங்கியிருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: