தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தும் காங்கிரஸ்: பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை..!

டெல்லி: பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் கடந்த 16ம் தேதி நேரில் சந்தித்துப் பேசினார். 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள இந்திய மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 370 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் கவனம் செலுத்தலாம் என்றும் அதற்கு முன்னதாக, கட்சியின் பலவீனங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியுடன் பேசியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் இன்று பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று பெறுவதாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்தல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக தகவல் பரவி வருகிறது. அவர் கட்சியில் எந்தப் பொறுப்பையும் கேட்கவில்லை என்று தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: