முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தொரப்பள்ளி  முதல் கர்நாடகாவின் பந்திப்பூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளை காட்டு யானை திடீரென விரட்டியது. சாலையில் நின்றிருந்த சிலர் வாகனத்தில் ஏறிவிட வனத்துக்குள் நின்று கொண்டிருந்த நபரை ஆக்ரோசமாக விரட்டியது. அந்த நபர் வேகமாக ஓடி சென்று காரில் ஏறியதால் உயிர் தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: