டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ள ஆஸி. வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: சக வீரர்கள் கலக்கம்

டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது சக வீரர்களை கலக்கமடைய செய்துள்ளது. நடைபெற்று வரும் 15வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிலையில் அணியில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேப்பிட் ஆண்டிஜன் பரிசோதனையில் அந்த வீரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மற்ற வீரர்களும் சோதனை முடிவுகள் வரும் வரை அறையில் தனிமைப்படுத்திக் கொள்ள அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி அணி அடுத்து வரும் புதன்கிழமை புனேவில் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதற்காக இன்று புனே புறப்பட இருந்த நிலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பயணம் தாமதமாகியுள்ளது. அணியின் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி தெரியவந்துள்ளது.

Related Stories: