×

திமுகவை தேவையில்லாமல் வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம்: எல். முருகனுக்கு ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை

சென்னை: திமுகவை தேவையில்லாமல் வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் ஒன்றிய இணையமைச்சர் எல். முருகனுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார். பொறுப்பான பதவியில் உள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுவது அவரது அறியாமையே வெளிப்படுத்துகிறது. எல்.முருகன் திமுக மீது அவதூறாக பேசுவதையும் கருத்து தெரிவிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் . ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கை தொடர வழி வகுக்க வேண்டாம் என ஆர் எஸ் பாரதி கூறியிருக்கிறார்.  எல்.முருகன் தனது போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால் திமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.எஸ் பாரதி எல்.முருகனுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,L. RS ,Bharathi ,Murugan , R.S Bharathi warning to L.Murugan
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி