×

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததையடுத்து ஏப்.18 முதல் ஏப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே, சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்,ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Tags : Author Examination Board , Extension of time till April 26 to apply for Teacher Qualification Examination: Teacher Selection Board Order
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!