×

ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்: 4வது வெற்றி யாருக்கு?

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 30வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் 5போட்டியில் 3 வெற்றி (ஐதராபாத், மும்பை, லக்னோ), 2 தோல்வி (ஆர்சிபி, குஜராத்) கண்டுள்ளது. கடைசி போட்டியில் குஜராத்திடம் வீழ்ந்த நிலையில் இன்று வெற்றி பாதைக்கு திரும்ப போராடும். பேட்டிங்கில் பட்லர் 272 ரன் குவித்து டாப்பில் உள்ளார். கேப்டன் சாம்சன், படிக்கல், டூசென் ரன் எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். பந்துவீச்சில் சாஹல் 12 விக்கெட் வீழ்த்தி உள்ளார். காயத்தில் இருந்து மீண்ட போல்ட் இன்று களம் இறங்கலாம்.

மறுபுறம் கொல்கத்தா 6 போட்டியில் 3 வெற்றி (சென்னை, பஞ்சாப், மும்பை), 3 தோல்வி (ஆர்சிபி, டெல்லி, ஐதராபாத்) கண்டுள்ளது. வெங்கடேஷ், கேப்டன் ஸ்ரேயாஸ், நிதிஷ்ராணா என யாரும் நிலையான பார்மில் இல்லை. ரசல் மட்டும் அதிரடியில் மிரட்டுகிறார். பந்துவீச்சில் உமேஷ், கம்மின்ஸ், சுனில் நரேன் வலு சேர்க்கின்றனர் இரு அணிகளும் இன்று 4வது வெற்றிக்காக போராடும். இதற்கு முன் மோதிய 25 போட்டிகளில் கொல்கத்தா 13, ராஜஸ்தான் 11ல் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 4 போட்டியில் கொல்கத்தா 3ல் வென்றுள்ளது.

Tags : Rajasthan ,Kolkata , Who won the 4th match of Rajasthan-Kolkata clash today?
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்